நிலுவையில் உள்ள பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நிலுவைத் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘நிலுவை தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது.
நிலுவையை வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்,’ என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.