தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், இரவு 7 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவின் இறுதி நிலவரம், இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை, வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மாவட்ட ரீதியாக, கரூரில் அதிகபட்சமாக 83.92 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகளும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட போடி தொகுதியில் 73.65 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகளும், பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.