இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ ( benjamin Netanyahu) புதிய அரசை அமைப்பதற்கு 28 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல்களில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அண்மையில் 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
அதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றிய போதும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 61 இடங்கள் கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சி கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி , புதிய அரசை அமைப்பதற்கு 28 நாள் காலஅவகாசத்தையும் வழங்கியுள்ளார்.