பலஸ்தீனர்களுக்கு 235 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் அமெரிக்க உதவியைக் குறைத்ததில் இருந்து கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பலஸ்தீன அகதிகளை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகளின் நிறுவனத்திற்கு மீண்டும் நிதி வழங்குவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் இதன் மூலம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பலஸ்தீனர்களுடனான அமெரிக்க உறவுகளை சரிசெய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, மனிதாபிமான, பொருளாதார மற்றும் அபிவிருத்தி உதவி உள்ளிட்ட தொகுப்பினை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கன் (ANDONY BLINGAN) விவரித்துள்ளார்.
அத்துடன் இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனியர்களுக்கும் செழிப்பு, பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை உடனடி காலப்பகுதியில் உறுதியான வழிகளில் முன்னேற்றுவதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.