பிரித்தானியாவுக்கான மியன்மார் தூதுவர், க்யாவ் ஸ்வார் மின் (Kyaw Zwar Minn) லண்டனில் உள்ள தூதரக கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
மியன்மார் தூதரகத்திலுள்ள, இராணுவ ஆலோசகரே, அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.
மியான்மார் இராணுவ ஆட்சியாளர்களால், சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததன் பின்னணியில் தூதுவர் க்யாவ் ஸ்வார் மின், வெளியேற்றப்பட்டுள்ளார்.
இது லண்டனில் நடக்கும் ஒரு வகையான ஆட்சிக் கவிழ்ப்பு என்று, க்யாவ் ஸ்வார் மின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர், தூதரகத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், துணைத் தூதுவர் சிட் வின் பிரித்தானியாவுக்கான மியான்மார் தூதுவராக பொறுப்பேற்றுள்ளார்.