பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனம் 1000 ரூபாய் என அரசாணை மூலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் பறிக்கின்ற மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவினை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் மறுத்துவருதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் மேலதிகமாக பறிக்கின்ற கொழுந்துக்கான கொடுப்பனவு, நாளாந்த வேதனமான 1000 ரூபாவிலேயே உள்ளடக்கப்பட்டிருப்பதாக தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமரது பெருந்தோட்டத்துறைக்கான இணைப்பாளர், செந்தில் தொண்டமான், மேலதிக கொடுப்பனவுகளை இல்லாது செய்ய முடியாது என்று கூறினார்.