பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் காவல்படையினர் விவகாரம் சம்பந்தமாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்த நிலையிலேயே அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவின் உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிவண்ணனிடம் சிறிலங்கா நேரப்படி இரவு எட்டுமணியிலிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்த நிலையிலேயே அவர் அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மணிவண்ணனுடன் நெருங்கிச் செயற்படும் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பார்த்தீபனிடத்தில் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.