வடகொரியாவில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று வடகொரிய சுகாதார அமைச்சு, உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை வடகொரியா மறைத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டியிருந்தது.
இதற்கு, வடகொரிய அரசு விளக்கமளிக்கையில், கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் இருந்து 23 ஆயிரத்து 121 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
எனினும். அவர்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு கண்டறியப்படவில்லை எனவும் வடகொரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.