ஒன்ராறியோவில் அமுலுக்கு வந்துள்ள வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை மீறுவோருக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை அடுத்து, ஒன்ராறியோவில் வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு இன்று அதிகாலை 12 மணி 01 நிமிடத்துக்கு நடைமுறைக்கு வந்துள்ளது.
நான்கு வாரங்களுக்கு இந்த முடக்க நிலை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுவோருக்கு 750 டொலர் அபராதம் விதிக்க முடியும் என்று தெரிவித்துள்ள முதல்வர் டக் போர்ட், முடிந்தவரை அவசியமான காரணமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும், எமது செயற்பாடுகளைக் குறைத்துக் கொண்டு பதுங்கிக் கொள்வதே சரியானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.