சிறிலங்காவில் 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தப்புள டி லிவேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் இமாஅத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் மொஹம்மதியா, தாருல் அதர் அல்லது ஜாமிஉல் அதர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம், ஐ,எஸ்.ஐ,எஸ், அல்கைதா, சேவ் த பேர்ல்ஸ், சுபர் முஸ்லிம் ஆகிய அமைப்புக்களே தடை செய்யப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே, இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.