அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு ஒவ்வாத வகையில், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எனினும், அவர் இதுபற்றிய மேலதிக விபரங்களை எதையும் வெளியிடவில்லை.
வியன்னாவில் அமெரிக்காவும், ஈரானும் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.