கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சென்னையில் இன்று ஆரம்பமாகிறது.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் மும்பை இண்டியன்ஸ் அணி, றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
போட்டிகள் அனைத்தும் சென்னை, மும்பை, அகமதாபாத், புதுடெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறுகின்றன.