கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, உள்ளிட்ட 8 நகரங்களில் நாளை முதல் எதிர்வரும் 20ஆம் நாள் வரை இரவு நேர ஊரடங்கு அமுல் செய்யப்படவுள்ளது.
தினமும், இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், குறித்த நேரத்தில், அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த தடையும் இருக்காது என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.
அத்துடன், கண்காட்சி, திருவிழா, மத நிகழ்ச்சிகளுக்கும் கர்நாடக மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், மாநில அரசு தெரிவித்துள்ளது.