அம்பாறை – திருக்கோவில், இத்திகுளத்தில் நீராட சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் முதலையின் பிடியில் சிக்கி காணமல் போயுள்ளார்.
இன்று காலை 9.30 மணியவில் இந்தச் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
குடிநிலம் பகுதியில் வசிக்கும், 62 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையையே, முதலை இழுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
காணமல்போனவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கடற்படையின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக திருக்கோவில் காவல் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.