கொரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்தியுள்ளதாக ஒன்ராரியோ மாகாண அரசு அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக அதிகரிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக பாடசாலை மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், உள்ளிட்டவர்களிடத்தில் உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக கொரோனா பரிசோதனை மையங்களும் விரிவுபடுத்தப்படவுள்ளது.