சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல்களினால் சிறைபிடிக்கப்பட்ட, கோப்ரா சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவு வீரர் ராகேஷ்வர் சிங் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் வனப் பகுதியில் கடந்த 3-ம் நாள் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கோப்ரா கொமாண்டோக்கள் அடங்கிய கூட்டுப் படை வீரர்கள், மீது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 31 இந்திய படையினர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலின் போது ராகேஷ்வர் சிங் என்ற கொமாண்டோ வீரர் காணாமல் போன நிலையில், அவர் தங்கள் பிடியில் இருப்பதாகவும் அவரை விடுவிக்க வேண்டுமெனில் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்றும் நக்சல்கள் அறிவித்தனர்.
இந்தநிலையில் மத்திய அரசு நடத்திய பேச்சுக்களை அடுத்து, ராகேஷ்வர் சிங்கை நக்சல்கள் இன்று விடுவித்துள்ளனர்.