சென்னையில் முக கவசம் அணியாதவர்கள், எச்சில் துப்புபவர்களிடம் அபராதம் விதிக்கப் போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாவும், பொது இடங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மற்றும், எச்சில் துப்பினால் 500 ரூபாவும் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
அதேபோல், மதுரையிலும் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபா அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.