தங்களை தாக்கினால் கடைசி வரை விடமாட்டோம் என்று, சீனாவுக்கு தாய்வான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தாய்வான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ (Joseph Wu) கருத்து வெளியிடுகையில்,
“நாங்கள், எங்களை தற்காத்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
போரில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் போரிடுவோம். தேவைப்பட்டால் எங்களை தற்காத்து கொள்ள கடைசி நாள் வரை போராடுவோம்.
தாய்வானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீனா அங்கீகரிக்கவில்லை.
அவர்கள் ஒருபுறம் தங்களது ஆறுதல்களை அனுப்புவதன் மூலம் தாய்வான் மக்களை கவர்ந்திழுக்க முனைகிறார்கள்.
அதே நேரத்தில் தாய்வான் மக்களை அச்சுறுத்தும் வகையில், தமது இராணுவ விமானங்களையும், போர்க்கப்பல்களையும் அனுப்புகிறார்கள்.
சீனர்கள், தாய்வான் மக்களுக்கு மிகவும் கலவையான சமிக்கைகளை அனுப்புகிறார்கள்.” என்றும் கூறியுள்ளார்.