அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி வரலாற்றில் ஒருபோதும் இல்லாதளவுக்கு இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 203.50 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக சிறிலங்கா மத்தி வங்கி தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முதற்தடவையாக சிறிலங்காவில் டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி 203 ரூபாவை கடந்துள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
இதற்கு முன்னர் மார்ச் 31 ஆம் திகதி டொலர் ஒன்றின் விற்பனை விலை 202 ரூபா வரையில் உயர்வடைந்தமை குறிப்பிடத்தக்கது.