மொசாம்பிக்கில், வெளிநாட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 12 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மொசாம்பிக்கில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடந்த மாதம் தாக்குதலுக்கு உள்ளான, பால்மா (Palma) என்ற நகரிலேயே, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 12 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி தொலைக்காட்சி ஒன்றிடம் கூறியுள்ளார்.
12 பேரும் கைகள் கட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களின் சடலங்களை புதைத்துள்ளதாகவும், அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வெள்ளையினத்தவர்கள் என்பதால், வெளிநாட்டவர்கள் என்று கருதுவதாகவும், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை எனவும், காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அதிகரித்து வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் குறித்து மொசாம்பிக்கின் தலைநகரில், ஆறு தெற்கு ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்.