இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 13 பேருக்கு ஒரே நாளில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பாகிஸ்தானியர், 3 ஈரானியர்கள், 9 இந்தோனேசியர்கள் என 13 பேரைக் கொண்ட கும்பல் காவல்துறையினால் கைது செய்யப்பட்டது.
மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுகபூமி நகர நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து, 13 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்தோனேசிய வழக்கப்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.