அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தாதியர்கள் இடமாற்றப்படுவதை மாகாண அரசாங்கம் ஒருங்கிணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொரண்டோவில் உள்ள மைக்கல் கரோன் (michael Garron) மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் மைக்கல் வோர்னர் (Michael Warner) இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம் மாத்திரம் 572பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளர்.
இவ்வாறான எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உரிய சிகிச்சைகளை வழங்குவதற்காக தாதியர்களின் பணி இன்றி அமையாதது.
ஆகவே அவர்களை ஒருங்கிணைக்கும் செயற்படுகளுக்கு மாகாண அரசாங்கம் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.