அரசாங்க வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அரசாங்க அதிகாரி ஒருவரை பருத்தித்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கை சேர்ந்த பெண் ஒருவர், அரசாங்க வேலைவாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை சந்திக்கச் சென்ற போது, அங்கிருந்த அரச அதிகாரி ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் தனது நண்பர் எனக் கூறி, அரச வேலைவாய்ப்பை பெற்று தருவதற்கு பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, சிறிலங்கா காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டு, அரச அதிகாரியை கைது செய்யப்பட்டுள்ளார்.