அவுஸ்திரேலியாவில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அந்த நாட்டு சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படக் கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துமாறு அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
ஐரோப்பாவின் சில பகுதிகளில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதனால் இரத்தம் உறைதல் பதிவானதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து அவுஸ்திரேலியா இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.