இந்தோனேசியாவின் ஜாவா தீவில், இடம்பெற்ற நிலநடுக்கத்தினால், குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 23 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் இரண்டு மணியளவில், ஜாவா தீவின் தெற்குக்கரையில் 6.0 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த நிலநடுக்கத்தினால், 300இற்கும் அதிகமான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.