பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கனடாவின் சார்பில் யார் பங்கேற்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எலிசபெத் மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப் காலமாகியுள்ள நிலையில், அவரது இறுதிச் சடங்கில் வழக்கமான மரபுகளின்படி கனடாவின் சார்பில் கவர்னர் ஜெனரல் பங்கேற்க வேண்டும்.
ஆனால் கவர்னர் ஜெனரலாக இருந்த Julie Payette கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதை அடுத்து புதிய கவர்னர் ஜெனரல் நியமிக்கப்படவில்லை.
இதனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி Richard Wagner, புதிய கவர்னர் ஜெனரல் நியமிக்கப்படும் வரை அந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றி வருகிறார்.
அதேவேளை, கொரோனா தொற்றினால் கனடாவில் இறுக்கமான பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சிக்கல்களாலும், இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கனடாவின் சார்பில் பிரதிநிதி ஒருவர் பங்கேற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.