புதிய அரசியலமைப்பில், சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்க கோரி, சிவசேனை அமைப்பின் நிறுவுநரான மறவன்புலவு சச்சிதானந்தம் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மறவன்புலவில் உள்ள தமது வீட்டில் அவர் இன்று காலை இந்த உணவு தவிர்ப்பை ஆரம்பித்துள்ளார்.
மாலை 6 மணிவரை இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் மதம் மாற்றிகள் மூலம், சைவ சமயத்திலிருந்து வேறு மதத்திற்கு மக்கள் செல்லமாட்டார்கள்.
சைவத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டால் பௌத்த மதமும் இந்து மதமும் பாதுகாக்கப்படும்.
குறிப்பாக கிழக்கில் மதம் மாற்றிகளின் செயற்பாடு அதிகரித்துள்ளது.
இந்து மக்கள் கோமாதா என வணங்கும் பசுக்களை உணவுக்காக வெட்டுவதை நிறுத்த கோருகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.