நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பிரத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மீனவரான 40 வயதுடைய நபர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது மயக்கமடைந்திருந்த நபரை சோதனை செய்த வைத்தியர் அவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டு பிரேத அறைக்கு அவரது சடலத்தை மாற்றுமாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த நபரின் குடும்பத்தினர் கூச்சலிட்டு அழுந்துள்ளனர். பின்னர் அந்த நபர் தான் உயிரிழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது கைகளை உயர்த்தியுள்ளார்.
இதனை அடுத்து வைத்தியசாலையில் ஊழியர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நபரின் உடலில் சீனியின் அளவு குறைந்த நிலையில் அவர் கோமா நிலையில் இருந்துள்ளதாக வைத்திய பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவர் உயிரிழந்ததாக தெரிவித்த வைத்தியருக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவு தெரிவித்துள்ளது.