ஒன்ராரியோவில் இன்று அனைத்துப் பிரிவினரும் கொரோனா தடுப்பூசியைப் செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
காலைமுதல் நூற்றுக்கணக்கானவர்கள், வெளிநோயர் பிரிவுகளுக்கு நேரடியாகச் சென்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து தடுப்பூசியின் முதலாவது மருந்தளவைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதில் இளம் சமூகத்தினர் அதிகளவில் பங்கேற்றிருந்தமை முக்கியமான விடயமென பொதுசுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கொரோனா தடுப்பூசி தொடர்பில் தேவையற்ற அச்சங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.