ஒன்ராறியோவில் மருத்துவமனைகளில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் இரண்டு அவசரநிலை உத்தரவுகளை மாகாண அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, அவசர சிகிச்சைப் பிரிவின் கொள்திறனை அதிகரிக்கும் வகையில், அறுவைச் சிகிச்சைகளை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நோயாளிகளின் ஒப்புதல் இன்றி, வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்கும் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரகால நடைமுறை மேலும் நீடிக்கப்படாவிட்டால், 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவசர சிகிச்சைப் பிரிவில் 1000 படுக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.