கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டதோடு 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை பத்து இலட்சத்து 36ஆயிரத்து 023 பேர் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 211பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 64ஆயிரத்து 291பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 835பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.