கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிரணி துணை செயலாளரான சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை அறிவித்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன், அதிமுக உறுப்பினர்கள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.