யாழ். மாநகர மேயர் பயங்கரவாதப் புலனாய்வு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
கீச்சகப் பதிவென்றை விடுத்துள்ள அவர், நீதிமுறை-ரீதியான பாதுகாப்புகளுடன் கூடிய உறுதியான சட்டத்தின் ஆட்சியை பேணுவதே பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சிறந்த வழி என்று கூறியுள்ளார்.
‘அனைவரினதும் அடிப்படைச் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொண்டே’ அதனைச் செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.