கொரோனா தடுப்பு மருந்துகளை செல்வந்த நாடுகள் அதிக அளவில் பெறுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம்,
“ உலகளவில் 700 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளில், 80 சதவீதம் செல்வந்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
செல்வந்த நாடுகளில் நான்கு பேரில் ஒருவர் தடுப்பூசியை குறைந்தபட்சம் ஒரு முறையாவது பெற்றுள்ளார்.
ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 500 பேரில் ஒருவருக்கு மட்டுமே தடுப்பூசியின் முதல் கட்டம் கிடைத்துள்ளது.
உலக அளவிலான தடுப்பூசிகளின் விநியோகத்தில் அதிர்ச்சியூட்டும் ஏற்றத்தாழ்வு உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.