அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இப்பதவியை வகித்த நாலக்க களுவெவ அண்மையில் பதவி விலகியிருந்தார்.
இதனையடுத்து, வெற்றிடமான பதவிக்கு மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இவர் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.