தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரைப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
பஞ்ச மூர்த்தி சுவாமிகள் புறப்பாடு பிரகாரத்தில் நடைபெற்று. கொடி ஏற்றப்பட்டது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதனால் நாளை முதல் கோயில் விழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
இதன்காரணமாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோயிலுக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெறும் தேரோட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.