தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள், பலனளிக்கவில்லை என்றால், இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொது இடங்களில், பொது மக்கள் முக கவசம் அணிவதை தவிர்ப்பதாலும், சுகாதார வழிகாட்டு முறைகளை பின்பற்ற தவறுவதாலும், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து முதல்கட்டமாக தமிழக அரசு 50 சதவீத கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. திருவிழா மற்றும் மதம்சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்களில் சில்லறை வியாபார நிலையங்களுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் பலன் அளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு மேலதிக கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.