திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, கொரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
இதன்போது அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின
ஆனால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றே பரிசோதனை அறிக்கை வந்ததாக, துரைமுருகன் மற்றும் அவரது மகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
துரைமுருகனுக்கு கொரோனா என்ற தகவலில் உண்மையில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.