நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பெனூ (Benue ) மாகாணத்தில், இடம்பெற்ற பதுங்கித் தாக்குதலில் 11 அரச படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலை அடுத்து, காணாமல் போயிருந்த 11 இராணுவத்தினரும், சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரது சடலங்கள் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் தளபதி என்றும் தெரிவித்த நைஜீரிய இராணுவப் பேச்சாளர் இது ஒரு கொடூரமான குற்றம் என்றும் விபரித்துள்ளார்.
படையினர் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பொதுமக்கள் மீது அரச படைகளால் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை நைஜீரிய இராணுவம் நிராகரித்துள்ளது.