பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவையொட்டி 8 நாட்கள் தேசிய துக்கதினம், அனுஷ்டிக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை வின்சர் கோட்டையிலுள்ள பெர்க்மோர் (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது 99 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.
மறைந்த இளவரசர் பிலிப், 1921 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947 ஆம் ஆண்டு இங்கிலாந்து மகா ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார்.
சுமார் 65 வருடங்கள் மகா ராணிக்கு உதவியாக இருந்த பிலிப், கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில் இருந்து விடுவித்துக் கொண்டார்.
இவர் மகாராணி எலிசபெத்தின் ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட வருடங்கள் இளவரசராக இருந்தவர் பிலிப் என்பது குறிப்பிடத்தக்கது.