ரொரண்டோ சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக பிரவேசிக்கும் புலம்பெயர் பண்ணைத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை கனடியன் பிரஸ் (CANDIAN PRESS) வெளியிட்டுள்ளது.
அத்துடன், குறித்த திட்டமானது, நாளை சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளையதினம், மெக்சிக்கோவிலிருந்து 200பேர் வரையிலான பண்ணைத்தொழிலாளர்கள் ரொரண்டோ வானூர்தி நிலையத்தின் ஊடாக பிரவேசிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது