யாழ்ப்பாண மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டமையானது மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் செயற்பாடு என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர முதல்வர் ஏதேனும் தமது கடமையின் போது தவறிழைத்திருந்தால் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய முறைகள் உள்ளன.
அதனைவிடுத்து அவரை பயங்கரவாதி போல் சித்தரித்து நாட்டில் அரசாங்கத்தினர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் இன்னும் அறியப்படாதுள்ளனர்.
எனவே, புதிய அச்சங்களை ஏற்படுவதை தவிர்த்து ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்