மேற்கு வங்காளத்தில் 44 சட்டசபை தொகுதிகளுக்கு, நாளை நான்காவது கட்ட வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ளது.
இந்த மாநிலத்தில், கடந்த மாதம், 27ஆம் நாள் தொடங்கி இம்மாதம், 29 ஆம் நாள் வரை, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 44 சட்ட சபை தொகுதிகளுக்கு, நான்காம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
நாளைய தேர்தலின் போது, 373 வேட்பாளர்களின் கதியை ஒரு கோடி 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 22 வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.