மேற்கு வங்காளத்தில் இன்று நடைபெற்ற 4ஆம் கட்ட தேர்தலில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், அங்கு மேலதிக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற தேர்தலில் மாநிலத்தின், பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
வன்முறையை தடுக்க அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், ஊடகத்துறையினரின் வாகனங்கள், வேட்பாளர்களின் வாகனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள எஞ்சிய 4 கட்ட தேர்தல்களிலும் பாதுகாப்பு வழங்குவதற்காக மேலதிகமாக பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக, 6 ஆயிரம் பேர் கொண்ட மத்திய ஆயுத காவல் படையின் 71 அணிகளை மேற்கு வங்காளத்திற்கு அனுப்பி வைக்க மத்திய உள்துறை அமைச்சுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.