கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதியை செய்வதை உடனடியாக நிறுத்தி விட்டு, தேவைப்படும் அனைவருக்கும் போட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
“தற்போதைய நிலையில், இந்திய மக்கள் தொகையில் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி கிடைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும்.
இது பேரழிவை ஏற்படுத்துவதுடன், இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.
அதிகளவு தடுப்பூசியை இந்தியா ஏன் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறித்து தெளிவான காரணங்கள் இல்லை.
எமது நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், 6 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
தடுப்பூசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். ஏனைய தடுப்பூசிகளுக்கும் விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்” என்றும் அந்த கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.