கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறந்து வைக்கப்பட்ட வீதி பெயர்ப்பலகையை அகற்றுமாறு சிறிலங்கா காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட குறித்த வீதிக்கு, வெற்றி வீதி என பெயர் சூட்டப்பட்டு கடந்த மாதம் 28ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பாக, பயங்கரவாத தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய, கிளிநொச்சி காவல்துறையினர், இன்று கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை 8 மணி தொடக்கம், சுமார் ஒரு மணி நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த வீதி பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்று சிறிலங்கா காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
வீதிப் பெயர்ப்பலகையை அகற்றாவிட்டால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறிலங்கா காவல்துறையினர் கூறியதாகவும், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.