பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான, இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்த இளவரசர் பிலிப், இன்று காலை காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வின்ஸ்டர் காசில் (Windsor Castle) அரசு மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இளவரசர் சார்ள்சின் தந்தையான பிலிப், வயது மூப்பின் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிகஅதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப் என்பது குறிப்பிடத்தக்கது.