இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம், இன்று முதல் நடைபெறுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாநில முதலமைச்சருகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று ஆரம்பமாகும் தடுப்பூசி முகாம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில், இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 85 நாட்களில் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும்.