கொரோனா தொற்றின் மூன்றாவது அலையினால் கனடா கடினமான நிலையை எதிர்கொண்டுள்ளது என்று, உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கான சிறப்பு ஆலோசகர் மருத்துவர் பீற்றர் சிங்கர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், தடுப்பூசிகளின் மூலம், தற்போதைய நெருக்கடியை, சமாளிக்கும் திறன் கனடாவுக்கு உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் கவலைக்குரிய பிரச்சினை தடுப்பூசி சமமான முறையில் வழங்கப்படுவது தான் என்றும், மருத்துவர் பீற்றர் சிங்கர் கூறியுள்ளார்.
உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டாலும், விநியோகம் சீரற்றதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வருவாய் உள்ள நாடுகளில் தடுப்பூசி பாதுகாப்பு, அதிக வருமானம் இல்லாத நாடுகளை விட ஐந்து மடங்கு அதிகம் என்றும், இது மிகவும் மோசமான நிலைமை என்றும், மருத்துவர் பீற்றர் சிங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.