ரொறன்ரோ நகர முதல்வர் ஜோன் ரொறி (John Tory) கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதலாவது அளவைப் பெற்றுள்ளார்.
அவர், Queen Street Westஇல் அமைந்துள்ள மருந்தகத்தில், அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார்.
ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் கடந்த வெள்ளிக்கிழமை தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட நிலையில், ரொறன்ரோ நகர முதல்வரும் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.
அத்துடன் ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் கிறிஸ்ரின் எலியட்டும், (Christine Elliot ) எஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார்.